Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வந்த டாக்டர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த டாக்டர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆற்றூர் பறம்புவிளை பகுதியில் எட்வின் ஜேக்கப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 1 வயதுடைய குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் எட்வின் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கடையில் உணவு பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இந்நிலையில் மங்களாநடை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக எட்வின் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த எட்வினை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி எட்வின் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |