திருப்பதி ஏழுமலையான் என்றாலே ‘வசூல் மன்னன்’ என்பது எல்லோருக்குமே தெரியும். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில் திருப்பதி கோயிலில் எவ்வளவு வசூலாகியுள்ளது என்பதை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை திருப்பதி வெங்கடாசலபதி உண்டியலில் ரூ.833 கோடி வசூலாகியுள்ளது.
அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் திருப்பதி கோயிலுக்கு 1.04 கோடி பக்தர்கள் வந்துள்ளனர். 5.96 கோடி லட்டு விற்பனையாகியுள்ளது. மேலும் ஸ்ரீவாரி தரிசனத்திற்காக திருப்பதி கோயில் தயாராகி வருவதாக திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிந்த பிறகு ஆந்திர அரசிடம் இருந்து உத்தரவு வந்தவுடன் கோயில் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.