தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்தது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரியில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 6-ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் திடீரென்று அதிக அளவில் கொரோனா தொற்று மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, தமிழகத்தில் ஜனவரி 10-ஆம் தேதி வரை 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்துள்ளது. ஆனால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னதாக அறிவித்தபடி ஜனவரி 3-ஆம் தேதி முதல் பள்ளிகள் அரசின் நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வகுப்புகளை நடத்தலாம் என்று அரசு அனுமதி வழங்கியுள்ளது.