Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர்…. தி.மு.க பிரமுகர் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

துப்பாக்கியை காட்டி மிரட்டி தி.மு.க பிரமுகரிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நெய்யூர் பகுதியில் ஜெபராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குருந்தன்கோடு ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெபராஜிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வாலிபர் ஒருவர் 1,500 ரூபாயை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து ஜெபராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சேர்மராஜ் என்பவர் ஜெபராஜிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியது தெரியவந்துள்ளது. இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது. இதனையடுத்து சேர்மராஜை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |