கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடுகளை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம் என்.ஏ.ஜி காலனி தெருவில் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் கிணற்றுக்கு அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாட்டை பத்திரமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து 8 அடி ஆழ கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த மற்றொரு பசு மாட்டையும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டனர்.