சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனக்கும், எனது தங்கைக்கும் தந்தை பாலியல் தொந்தரவு கொடுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமிகளின் தந்தை அவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது.
இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தந்தை, உடந்தையாக இருந்த சிறுமியின் அத்தைகள் ஆகியோரை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் சிறுமியின் தந்தையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.