Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டயர் குடோனில் தீவிபத்து …!! 3மணி நேரம் போராட்டம் …!!பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம் …!!

திருச்சியில் டயர் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள்  எரிந்து நாசமாயின.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிவிஎஸ் டோல்கேட் அருகே கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான டயர் குடோன் ஒன்று உள்ளது .மூன்றடுக்கு கட்டடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள இந்த குடோனில் இன்று அதிகாலை 4மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது .இது பற்றி தகவலறிந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 3மணி நேரமாக போராடி தீயை  கட்டுக்குள் கொண்டு வந்தனர் .

சல்பர் கலந்துள்ள டயர்களில் தீப்பற்றியதால் அதிக அளவில் புகை வெளியேறியதாக தீயணைப்பு துறை துணை இயக்குனர் மீனாட்சி குறிப்பிட்டார் .தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Categories

Tech |