உலகம் முழுவதும் கொரோனா தொற்று பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் ஆல்ஃபா என்றும் டெல்டா வைரஸ் என்றும், தற்போது ஒமைக்ரானாக உருமாறி இருக்கிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸை ஒழிக்கவே முடியாது. அது நம்முடன் பூமியில் இருக்கும் என நுண்ணுயிரியல் நிபுணர் சுகன்தீப் காங் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்க்கு காரணமான சார்ஸ் கோவிட்- 2 மற்றும் அதன் திரிபுகளுடன் மனிதர்கள் வாழும் நிலைதான் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் பல கொரோனா அலைகள் வரக்கூடும் என்றும், மற்ற கொரோனா திரிபுகளை விட ஒமைக்ரான் வீரியம் குறைவானது தான் எனவும் தெரிவித்துள்ளார்.