கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் கிராமத்தில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் பெண்களுக்கான நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இது நடைபாதையில் இருப்பதாக கருதி ஒரு பிரிவினர் கட்டிடத்தை இடித்து சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் கோபமடைந்த கிராம மக்கள் ராஜபாளையம்- சங்கரன்கோவில் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.