Categories
தேசிய செய்திகள்

“ஏன்டா சட்டையை இப்படி தச்ச?”…. ஆத்திரத்தில் டெய்லரை அடித்து கொலை செய்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பீமாலியில் கூடுலீமா என்பவர் வசித்து வருகிறார். இவர் டெய்லர் தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி லட்சுமி. இவர்களுக்கு சமந்தா என்ற மகள் மற்றும் சுமன் என்ற மகன் உள்ளனர். சமந்தாவிற்கு திருமணமாகி கணவருடன் தாய் வீட்டிலேயே வசித்துவருகிறார். அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் கூடுலீமாவிடம் புத்தாண்டிற்கு அணிவதற்காக துணிகளைத் தைக்க கொடுத்துள்ளார். கூடுலீமா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துணிகளை தைத்துக் கொடுத்து உள்ளார். அதன் பிறகு கணேஷ் துணிகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று போட்டுப் பார்த்தபோது சட்டை இறுக்கமாக இருந்துள்ளது.

இதையடுத்து மீண்டும் டெய்லரிடம் சட்டையை பிரித்து சரியாக தைத்து தர வேண்டும் என்று கூறினார். ஆனால் உடனடியாக தைத்து முடியாது, சில நாட்கள் ஆகும் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் கிளின்டன் மற்றும் சூரியநாராயணனுடன் வந்து வீட்டில் இருந்த டெய்லர் கூடுலீமாவை சரமாரியாக தாக்கினார். இவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து தாக்கியவர்களை தடுத்த போது அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். படுகாயமடைந்த கூடுலிமாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பி.என். பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |