பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் கூலித் தொழிலாளியான முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான மிக்கேல் அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக மிக்கேல் அம்மாள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மிக்கேல் அம்மாள் வீட்டில் இருந்த அனைத்து மாத்திரைகளையும் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மிக்கேல் அம்மாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.