நித்தியானந்தா மீது சென்னை மாநகர ஆணையாளரிடம் மேலும் ஒரு பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சாமியார் நித்யானந்தா மீது தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது நித்தியானந்தாவினுடைய முன்னாள் சீடர் தஞ்சாவூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர், நித்யானந்தா மீது புதிய புகாரை அளித்திருக்கிறார். புகார் மனுவில், தான் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் கடந்த 11வருடங்களாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2015 ம் ஆண்டு நித்தியானந்தா என்னை வலுக்கட்டாயமாக ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார் என்று புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுங்கள் என்றும் சென்னை மாநகர ஆணையாளரிடம் தஞ்சாவூரைச் சேர்ந்த சீடர் விஜயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.