தலீபான்கள் ஆட்சி நடந்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா கூடுதல் மருத்துவ உதவி பொருட்களை அனுப்பியுள்ளது. அதாவது 5 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரமானது தலீபான்களில் வசம் சென்ற பின் அந்நாட்டிற்கு இந்தியா 2-வது தவணையாக மருத்துவ பொருட்களை அனுப்பியுள்ளது.
வரும் வாரங்களில் மேலும் 50 -ஆயிரம் டோஸ்கள் தடுப்பூசி அனுப்பப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையில் பாகிஸ்தான் வழியாக சாலைப்பயணம் மூலமாக ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரன் டன்கள் கோதுமை அனுப்பப்பட இருப்பதாக இந்தியா ஏற்கனவே அறிவித்து இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வுகாண உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.