நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது. அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்றிம் 2ம் அலை தாக்கத்தின் போது மாநிலங்களில் உள்ள நிலைமையை பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. கொரோன முதல் மற்றும் 2-ம் அலையில் இரண்டு முறையும் மற்ற அனைத்து மாநிலங்களையும் விட மகாராஷ்டிரா தான் அதிகம் பாதிக்கப்பட்டது. அதன்பின் இங்குகொரோனா கட்டுப்பாடுகள் அதிக நாட்களுக்கு கடைபிடிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் புதிய உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை பரவல் கண்டறியப்பட்டு தற்போது அதிக எண்ணிக்கையில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மட்டும் 3,900 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 5,368 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிலும் மும்பை நகரத்தில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதால் 144 தடை உத்தரவு ஜனவரி 15ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் மும்பையில் கடற்கரைகள், திறந்தவெளி மைதானங்கள், பூங்காக்கள் மற்றும் ஊர்வலம் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.