Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 2,200 லிட்டர்…. அதிரடி வேட்டை…. போலீஸ் வலைவீச்சு….!!

2,200 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் அரகண்டநல்லூர் காவல்துறையினர் சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் 2,200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்பின் காவல்துறையினர் அதை கீழே கொட்டி அழித்துள்ளனர். இது சம்பந்தமாக அதே பகுதியில் வசிக்கும் ராமு என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |