அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கு ஜனவரி 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு எமிஸ் இணையதளம் வழியாக நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் ஜனவரி 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பதிவு செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் முன்னுரிமைப்பட்டியல் ஜனவரி 10-ஆம் தேதி வெளியிடப்படும். மேலும் அந்தப் பட்டியலில் திருத்தம் இருப்பின் ஒரு நாள் பணிகள் மேற்கொள்ளப்படும். மாறுதல் விண்ணப்பங்கள் இறுதி முன்னுரிமை பட்டியல் ஜனவரி 13-ஆம் தேதி வெளியிடப்படும். அதன்பின்னர் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு ஜனவரி 19- முதல் பிப்ரவரி 18-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.