Categories
தேனி மாவட்ட செய்திகள்

வருகின்ற 4ஆம் தேதி முதல்…. வெளியான ஹேப்பி நியூஸ்…. ஆட்சியரின் அறிவிப்பு….!!

வருகின்ற 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 20 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 20 ஆயிரத்து 897 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த பரிசு தொகுப்பு வருகின்ற 4ஆம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 150 முதல் 200 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையின்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் பொருள்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |