Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கூடுதலாக சோதனை சாவடிகள்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. பாதுகாப்பு பணியில் போலீஸ்….!!

கூடுதலாக சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் தற்போது ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இவற்றை வரவேற்கும் விதமாக நள்ளிரவு முதலே பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் மற்றும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இம்மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம் காவல்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பின் காவல்துறை சூப்பிரண்டு சக்தி கண்ணன் மேற்பார்வையில் கூடுதல் காவல்துறை சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் 10 துணை காவல்துறை சூப்பிரண்டுகள் என மொத்தமாக 1400 காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து ஒமைக்ரான் பரவல் காரணமாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்ப்பதற்கு ஆட்டோ மூலமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். இது மட்டுமில்லாமல் மது கடத்தலை தடுக்கும் பொருட்டு 8 மதுவிலக்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. பின்னர் குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக மாவட்டத்தில் 75 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து வாகன தணிக்கை நடைபெற்று வருகின்றது.

இதில் இம்மாவட்டம் முழுவதுமாக 45 வாகனங்களில் காவல்துறையினர் விடிய விடிய ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்களான சில்வர் பீச் மற்றும் சாமியார் பேட்டை கடற்கரை ஆகிய பகுதிகளில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் தடுப்பு அமைத்து, விளம்பரங்கள் வைத்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |