சிவகார்த்திகேயனின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் டான், அயலான் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன.
இந்நிலையில், புத்தாண்டில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சிவகார்த்திகேயனின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் இவர் ”sk20” படத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இந்த திரைப்படம் குறித்த அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://twitter.com/Siva_Kartikeyan/status/1477158149211627520