Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் கொரோனா பரவல்”…..மத்திய அரசு புதிய அலர்ட்….!!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தால் சிகிச்சைக்காகவும், தடுப்பு நடவடிக்கைக்காகவும், சிகிச்சை மையங்களை தயார்நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தேவைப்படும் பட்சத்தில் தற்காலிக சிகிச்சை மையங்களை டி.ஆர்.டி.ஓ உதவியுடன் ஏற்படுத்தலாம் என்றும் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில், வீட்டில் தனிமையில் இருப்போரை கண்காணிக்க உரிய சிறப்பு குழுவை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு மையங்களை திறக்கவும் இந்த கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |