Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“நான் வேலை வாங்கி தரேன்”…. ஊராட்சி மன்ற தலைவர் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 7 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டு தப்பியோடிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள கற்காத்தகுடி கிராமத்தில் பீட்டர் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கிரேசியா படிப்பை முடித்துவிட்டு அரசு வேலை தேடி கொண்டிருந்துள்ளார். அப்போது அதே ஊரை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவரான சேகர் என்பவர் சவேரியார்பட்டினத்தில் செயல்பட்டுவரும் புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணி வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதனை கண்மூடித்தனமாக நம்பிய கிரேசியா, சேகர் கேட்ட 7 லட்சம் ரூபாயை இரண்டு தவணையாக வழங்கியுள்ளார். இதனையடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட சேகர் வேலை தாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிரேசியா ராமநாதபுரம் மாவட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தப்பியோடிய சேகரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |