Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிலையை அகற்றிய அதிகாரிகள்…. இந்து முன்னணியினரின் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு…!!

விநாயகர் சிலையை அகற்றியதை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் மின்சார வாரிய அலுவலகம் அருகில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக கூறி விநாயகர் சிலையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து அறிந்ததும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவா, செயலாளர் சுடலை ஆகியோரின் தலைமையில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |