தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் டெல்லியில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகள் மூடல் மற்றும் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் குடியரசு தலைவர் மாளிகை அருங்காட்சியகம் போன்றவற்றிற்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது இந்த தடை உத்தரவு அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் குடியரசுத் தலைவரின் பாதுகாவலர்கள் மாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.