Categories
சினிமா தமிழ் சினிமா

ரீஎன்ட்ரி கொடுக்கும் வெள்ளி விழா நாயகன்…. ரசிகர்கள் எதிர்பார்ப்பு…!!!

தென்னிந்திய சினிமாவின் வெள்ளி விழா நாயகன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது.

தமிழ் சினிமாவில் கடந்த 1977ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான கோகிலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மோகன். இதன் பிறகு தொடர்ந்து நடித்த அவர் 80,90களில் முன்னணி நடிகராக வலம்வந்தார். மேலும் தென்னிந்திய சினிமாவில் வெள்ளி விழா நாயகன் என்றும்  அனைவராலும் பாராட்டு பெற்ற நடிகருமாவார்.

இதைதொடர்ந்து நீண்ட காலமாக படங்களில் நடிக்காமல் இருந்து வரும் மோகன் தற்போது விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் புதிதாக உருவாகவுள்ள படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் பிரபல நடிகர் மோகன் நடிக்கவுள்ள படத்தின் பெயர் “ஹரா” என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் இப்படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாகும் மோகன் | Mohan starring Hara - hindutamil.in

Categories

Tech |