தொடர்ந்து பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் தமிழக கடற்கரை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினால் இம்மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்பின் திடீரென கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
இதனையடுத்து இந்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி உள்ளது. பின்னர் தாழ்வான பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரிதும் அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து விடிய விடிய பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை குறைந்த காரணத்தினால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் படிப்படியாக வடிய தொடங்கியுள்ளது.