Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கழிவுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. சுகாதார சீர்கேடு அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பொது இடங்களில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவன கழிவுகள் மூட்டை மூட்டையாக பொது இடத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் மர்ம நபர்கள் அடிக்கடி கழிவுகளுக்கு தீ வைத்து செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |