கருக்கலைப்பு செய்த பெண் ரத்த வாந்தி எடுத்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் பகுதியில் அருண் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அருண் சிந்துஜா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். சிந்துஜா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சிறுவயதில் இருந்தே இருதய பிரச்சனையால் அவதிப்பட்ட சிந்துஜாவுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த சிந்துஜா விஷம் குடித்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக சிந்துஜாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அப்போது சிந்துஜாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் இருதய பிரச்சினை இருப்பதால் குழந்தை பெற்றெடுப்பதில் சிரமம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி சிந்துஜாவிற்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த சிந்துஜா ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.