தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவாகி இருந்தது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம், மதுரை, நெல்லை உட்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.