மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திப் பிரஜாபதி. இவரது மகன் கரன் ஓம்பிரகாஷ். 10 வயதே ஆன கரன் டிசம்பர் 29 அன்று இரவு 11.30 மணி அளவில் தனது வீட்டிலிருந்து அலறியதையும் மற்ற குழந்தைகள் அவனை அடிக்க வேண்டாம் என்று கத்தியதையும் அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர். மறுநாள் குழந்தைகளின் அத்தை வீட்டிற்கு வந்து வெகு நேரமாகியும் யாரும் கதவைத் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீட்டிற்குள் நுழைந்த போது கரன் தரையில் சுயநினைவற்ற கிடந்துள்ளார்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சி தரும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது சிறுவன் கரன் அவரது தந்தை சந்திப் பிரஜாபதியிடம் 50 ரூபாய் திருடியதாகவும் அதற்காக தந்தையே 10 வயது மகனை அடித்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் முதலில் தலைமறைவாக இருந்த சந்திப் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளார்.