அரசின் தடையை மீறி புத்தாண்டு கொண்டாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்திள் உள்ள துணை சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் ஓமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதனால் மாவட்டம் முழுவதும் 1,500-கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் வாகன ஜானகிபுரம் புறவழிச்சாலை,புதுப்பாளையம் புறவழிச்சாலை மற்றும் விழுப்புரம் புதுச்சேரி நெடுஞ்சாலை என 9 இடங்களில் பேரிகார்டு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்நிலையில் ஜானகிராம் புறவழிச்சாலை ,புதுப்பாளையம் புறவழிலை என விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மேலும் கட்டுபாடுகளை மீறி இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.