இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் கட்டுப்பாட்டை கடுமையாக்க மத்திய சுகாதாரத்துறை சற்றுமுன் அனைத்து மாநிலங்களுக்கும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமையில் இருப்பவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை விரைந்து உருவாக்க வேண்டும். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக மருத்துவமனைகள் ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.