Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம சூர்யா ஜோதிகாவோட மகளா இது….? நல்லா வளந்துடாங்களே….! வைரலாகும் புகைப்படம்….!!!!

ஷ்ரேயா ஷர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு முன்பே இவர்கள் இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், பேரழகன், உயிரில் கலந்து, சில்லுனு ஒரு காதல் போன்ற திரைப் படங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இதில் ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ”சில்லுனு ஒரு காதல்”. இந்த திரைப்படத்தில் இவர்களுக்கு ரீல் மகளாக நடித்தவர் குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா சர்மா. இந்நிலையில், ஷ்ரேயா ஷர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. ஆளே அடையாளம் தெரியாமல் வளர்ந்துள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |