Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு…. நடைபெற்ற சைக்கிள் பேரணி…. மாணவ-மாணவிகள் பங்கேற்பு…!!

மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் கலந்துகொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் முன்னிலை வகித்து நடத்திய இந்த ஊர்வலம் வாஞ்சூர் ரவுண்டானாவில் தொடங்கி புத்தூர் ரவுண்டானா வரை சென்றுள்ளது.

இதில் விபத்தில் சிக்கிய 48 மணி நேரத்தில் இன்னுயிர் காப்போம் என்றும், பெண் கல்வியின் அவசியம் பற்றியும், மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்துவது பற்றியும் மற்றும் மாசற்ற காற்றை சுவாசிக்க மரம் நட்டு சுற்றுச் சூழலைக் காப்பதை வலியுறுத்தியும் ஊர்வலம் நடைபெற்றது. மேலும் ஒமைக்ரான் வைரஸிலிருந்து பாதுகாக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவோம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |