கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 15 -18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. சிறார்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட இருக்கிற நிலையில் போரூரில் அந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இந்த நிலையில் அதே நாளன்று பள்ளிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசு உதவிபெறக்கூடிய மற்றும் தனியார் பள்ளிகளில் தகுதியான மாணவர்களை கணக்கெடுக்க வேண்டும். மேலும் ஒரு ஆசிரியரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பள்ளி நிர்வாகமும் சுகாதாரத் துறையும் இணைந்து பள்ளிகளில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.