Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN : முதல் நாளில் சதமடித்தது மகிழ்ச்சி ….! டேவன் கான்வே பெருமிதம் ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியில் டேவன் கான்வே சதம் அடித்து அசத்தினார் .

நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக டேவன் கான்வே 122 ரன்கள் குவித்தார் . இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 2-வது சதத்தை எட்டினார்.அதோடு புத்தாண்டில் முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார் .

இதுகுறித்து டேவன் கான்வே கூறும்போது,” இது மிகவும் சிறப்பு வாய்ந்த உணர்வு .இந்த போட்டியில் முதல் நாளில் சதமடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஆண்டின் முதல் நாளை இப்படி தொடங்கியிருப்பதில்  பெருமை கொள்கின்றேன். நான் சதம் அடித்த போது என்னுடன் ராஸ் டெய்லர் இருப்பது ஒரு பெரிய உணர்வாக இருந்தது. அதோடு சதம் அடித்ததை  நான் அவருடன் பகிர்ந்து கொண்டேன் .இது என் நினைவில் நீண்டகாலம் நிலைத்திருக்கும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |