சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சைலோம் மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தாவீதுராஜா என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.