செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் go back மோடி என்று கூறுவார்கள், ஆனால் ஆளுங்கட்சியாக இருப்பதனால் அவர்களே வந்து பங்கேற்பார்கள் இதுதான் அரசியல் என்று நாம் சொல்கிறோம். அவங்க அந்தந்த கால கட்டங்களுக்கு தகுந்த மாதிரி ஸ்டேட்மென்ட் மாத்துறாங்க. இது ஒரு தவறான முன் உதாரணம்,
அப்பவே மோடி வரும்போது கருப்பு பலூன்களை காண்பித்தார்கள், goback மோடி என்று டிரண்ட் பண்ணது திமுக தான் . இப்போ அவங்க முதலமைச்சராய் இருப்பதனால், திமுக ஆட்சியில் இருப்பதனால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மத்திய அரசு தயவு வேண்டும் என்பதனால் இன்றைக்கு அவங்க பிரைம் மினிஸ்டர் வருகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.
மக்கள் எல்லாரும் பார்த்துகொண்டு தான் இருக்காங்க. மக்கள் தான் இதற்கு தீர்ப்பு சொல்லவேண்டும். அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது அவர்கள் தயவு தேவைப்படுகிறது அதனால் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார்கள், இதுதான் அரசியல்.
தேமுதிகவின் செயல்தலைவர் பிரேமலதா விஜயகாந்த் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் சொன்னது. இது ஒட்டுமொத்த மாவட்ட செயலர்கள், நிர்வாகிகள் தொண்டர்களும், கேப்டனும் முடிவெடுக்கக்கூடிய ஒரு விஷயம். அது கேப்டன் வந்து சொல்வாரு, அது நான் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.
2026 தேர்தலில் பாமக தனித்துத்து போட்டியிடுகின்றது என்ற முடிவு அவங்க கட்சியுடைய நிலமை, அவர்கள் எடுத்த முடிவு. அதைப்பற்றி நான் எதுவும் கருத்து சொல்வதற்கு ஒன்றும் கிடையாது. 2026தேர்தல் வரும்போது எங்கள் நிலைப்பாட்டை நாங்க சொல்றோம். 2026க்கு இன்னும் ரொம்ப காலம் இருக்கு அந்த காலம் வரும்போது தேமுதிக எங்க கட்சி நிலவரம் எப்படி இருக்கு என்பதை சொல்கிறோம்.