Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது ….! 2021-ம் ஆண்டின் சிறந்த தருணம் …. பாபர் அசாம் பேட்டி ….!!!

2021-ம் ஆண்டு நடந்த டி20  உலக கோப்பை போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது எங்களது சிறந்த தருணம் என பாபர் அசாம் கூறியுள்ளார் .

பாகிஸ்தான் அணியின் கேப்டன்  பாபர் அசாம் நேற்று அளித்த பேட்டியில் கூறும்போது,”கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அரையிறுதி வரை சென்று  ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தோம் .அதேசமயம் ஓர் அணியாக  தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு என்னை அதிக காயப்படுத்தியது இந்த தோல்விதான் ஆனால் டி20  உலக கோப்பை போட்டியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தினோம் .

இது ஒரு அற்புதமான சாதனை .ஏனென்றால் இதற்கு முன்பாக நடந்த எந்த ஒரு  உலக கோப்பை போட்டியிலும் இந்திய அணியை நாங்கள் வென்றதில்லை. அதோடு முதல் முறையாக கிடைத்த இந்த வெற்றிதான் 2021 ஆம் ஆண்டில் எங்களது சிறந்த தருணம் ஆகும். திறமையான இளம் வீரர்களை உருவாக்கி வருவது எங்களுக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது .அதோடு பேட்டிங்கில் தனிப்பட்ட சாதனைகள் அணியின் வெற்றிக்கு உதவினால் அதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி தரும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |