இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தொற்று வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1400 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. அதன் காரணமாக தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு நேற்றைய தினம் பல்வேறு கொரோனா கட்டுப்பாடு உத்தரவுகளை அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நடைப்பயிற்சி செல்வோருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதையில் அவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். ஒமைக்ரான் பரவல்காரணமாக மறு உத்தரவு வரும்வரை பொதுமக்களுக்கு மணற்பரப்பில் அனுமதி இல்லை என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.