தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை போரூரில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளிகளில் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் தொடரும். கோவின்இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பள்ளிகளில் சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இடம் ஒதுக்கி சிறப்புக் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் கொரோனா தடுப்பூசி பணியை ஒருங்கிணைக்க ஆசிரியர் ஒருவரை தலைமை ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான மாணவர்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.