Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : 2-வது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வலுவாக திரும்பும் ….! முன்னாள் வீரர் ஹாசிம் அம்லா நம்பிக்கை ….!!!

ஜோகன்ஸ்பர்க்கில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என முன்னாள் வீரர் ஹாசிம் அம்லா கூறியுள்ளார்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த  முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .அதோடு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை ஜோகன்ஸ்பர்க்கில்  நடைபெறுகிறது. எனவே இப்போட்டியில் நிச்சயம் வெற்றியை கைப்பற்றும் கட்டாயத்தில் தென்னாபிரிக்கா அணி தள்ளப்பட்டுள்ளது .இந்த நிலையில் ஜோகன்ஸ்பர்க்கில் தென்ஆப்பிரிக்கா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என  தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான  ஹாசிம் அம்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது ,”செஞ்சூரியன் மைதானம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான மைதானம் ஆகும் .இதனால்தான் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது அதேபோல் முதல் இன்னிங்சில் 300 ரன்கள் குவித்தது. ஆனால் தென்னாபிரிக்கா அணியால் இந்த ஸ்கோரை எடுக்க முடியவில்லை .இதனால் 130 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா அணிகள் எளிதாக பேட்டிங் செய்ய முடியவில்லை. இதன்பிறகு  2-ம் நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் கடினமாகத்தான் இருந்தது. இதனால்தான் எங்கள் பந்துவீச்சாளர்கள் இந்திய அணி 300 ரன்களுக்குள் நிறுத்த முடிந்தது. இதனிடையே நாளை  நடைபெறும் 2-வது டெஸ்டில் எங்கள் அணி வீரர்கள் பலமாக திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறேன். இதனால் நிச்சயம் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |