ரிஷப ராசி அன்பர்களே…!!! இன்று குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். இன்று மனத்தெளிவு இருக்கும். அதாவது குழப்பங்கள் நீங்கி காரியம் சிறப்பாக நடக்கும்.
எடுத்த காரியத்தையும் நீங்கள் திறமையாக செய்து முடிப்பீர்கள். வயிறு கோளாறு சம்பந்தமான சில பிரச்சனைகள் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பணவரவு சீராக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீக பக்தி இன்று அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தடைகளும் விலகி செல்லும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்