இலங்கையின் புதிய அதிபர் அந்நாட்டிற்குள் கடந்த சில மாதங்களாக கொண்டு வந்த பல்வேறு நடவடிக்கைகளால் உணவு தானியங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள விவசாயிகள் கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபட்ச என்பவர் உள்ளார். இவர் அந்நாட்டில் கடந்த சில மாதங்களாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதாவது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரங்களை இறக்குமதி செய்வதற்கு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.
மேலும் வெளிநாட்டு பொருட்களின் இறக்குமதிக்கு அதிரடியாக தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் உடனடியாக பலன் கொடுக்காததால் அந்நாட்டில் மகசூல் குறைந்து உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள விலையில் அதனுடைய விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் கடுமையான சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்கள்.