8-வது புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன .
12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று யு மும்பா – உ.பி.யோத்தா, தெலுங்கு டைட்டன்ஸ்- பெங்களூரு புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ்- தபாங் டெல்லி ஆகிய அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடைபெற்றது .இதில் விறுவிறுப்பாக நடைபெற்ற மூன்று ஆட்டங்களும் சமனில் முடிந்தது.
இதில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி ஒரு வெற்றி , ஒரு தோல்வி 3 டிரா என புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இதில் தபாங் டெல்லி அணி 3 வெற்றி, 2 டிரா என 21 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் , 8.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன்-பெங்களூரு புல்ஸ் அணியும் மோதுகின்றன.