Categories
அரசியல்

எதுக்கு இந்த அவசரம்…. அவரு என்ன கொலையா பண்ணிட்டாரு…? குமுறும் மாஜிக்கள்…!!!

முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு அதிமுக சட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி வழக்கு இருக்கிறது. எனவே, அவர் முன்ஜாமினுக்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு காத்திருக்கும் நிலையில், காவல்துறையினர், அவரை தீவிரமாக தேடி வருவதால், இரண்டு வாரங்களாக தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரின் தலைமையில், அதிமுக சட்ட குழு உறுப்பினர்களான தளவாய் சுந்தரம், இன்பதுரை, பாபு முருகவேல் மற்றும் மனோஜ் பாண்டியன் போன்றோர் நேற்று முன்தினம் ஆர்.என் ரவியை சந்தித்திருக்கிறார்கள்.

அதன்பின்பு, பத்திரிகையாளர்களிடம் அவர்கள் தெரிவித்ததாவது, அரசாங்கத்தை எதிர்த்து கருத்து கூறுபவர்கள், அரசியல்வாதிகள் மீது, காவல் துறையினர் மூலம் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். மேலும், எதிர்க்கட்சியினர் மீது வழக்கு போடுகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படப்போவதில்லை.

அதனை நீதிமன்றத்தில் சந்திக்க தயார். ராஜேந்திர பாலாஜிக்கு இன்று ஏற்பட்ட நிலை, நாளை எங்களுக்கும் ஏற்படலாம். அவர் என்ன கொலையா செய்துவிட்டார்? அவருக்கு முன்ஜாமீன் தர உயர்நீதிமன்றம் மறுத்திருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல இருக்கிறார். அவரை கைது செய்வதற்கு எதற்காக இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள்? என்று கேட்டிருக்கிறார்கள்.

Categories

Tech |