Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் தமிழக தென்மாவட்ட கடற்கரையையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது.

இதனால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன்படி இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் போன்ற 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய  கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |