இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 17 லட்சத்து 59 ஆயிரம் இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளது. புகாருக்கு ஆளான கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் 95 சதவீத கணக்குகள், அங்கீகாரமின்றி மொத்தமாக மெசேஜ் அனுப்பி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் மெசேஜிங் மூலமாக 500 புகார்களும், நவம்பர் மாதத்தில் 603 புகார்களும் பதிவாகியுள்ளது.
ஆகவே தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி 6 மாத கால அறிக்கையை நவம்பரில் வெளியிட்டிருப்பதாகவும் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் இதுபோன்ற புகார்கள் எழுந்தால் அவர்களின் கணக்குகளும் முடக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.