Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மனு அளித்த பிறகு என்னை மிரட்டுறாங்க” தீக்குளிக்க முயன்ற தொழிலாளி…. சேலத்தில் பரபரப்பு…!!

தாலுகா அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள கூடமலை ஊராட்சி 6+வது வார்டில் விவசாய கூலி தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கடம்பூரில் இருந்து கூடமலைக்கு செல்லும் சாலையில் இருக்கும் கோவில் பாதையை சிலர் அடைத்ததோடு, அங்குள்ள ஓடையை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் எழுதியுள்ளார்.

இதனையடுத்து கெங்கவல்லி தாலுகா அலுவலகத்திற்கு சென்ற ராஜ்குமார் தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற கோரி புகார் அளித்த பிறகு சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர்.

Categories

Tech |