அடுத்தடுத்த வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து கீழ் நாடுகாணி வரை இருக்கும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. இந்நிலையில் நாடுகாணி பகுதியில் வைத்து சரக்கு லாரி ஒன்று சாலையில் கவிழ்ந்துவிட்டது. மேலும் நாடுகாணி தாவரவியல் பூங்கா அருகில் இருக்கும் சாலையோர பள்ளத்தில் மற்றொரு லாரியும் கவிழ்ந்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றி வந்த மினி லாரி கூடலூர்-கேரளா எல்லையில் கவிழ்ந்துவிட்டது. இவ்வாறு அடுத்தடுத்த வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திய பிறகு அங்கு போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது.