குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பவானி நகர் 5-வது விதியில் கணேஷ் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் குடோனில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள், அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ போன்றவை முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.